business

img

சீனாவின் சவாலை எதிர்கொள்ள 350 போர் விமானங்கள் வாங்கப்படும்... விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதவுரியா தகவல்....

புதுதில்லி:
இந்திய விமானப்படைக்கு அடுத்த 20 ஆண்டுகளில் 350 போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளதாக விமானப் படைத்தளபதி ஆர்கேஎஸ் பதவுரியா கூறியுள் ளார்.

தில்லியில் நடைபெற்ற விமானப்படை நிகழ்ச்சியில் பேசுகையில், இதனை அவர்தெரிவித்துள்ளார்.“வடக்கில் உள்ள நமது அண்டை நாட்டின் சவாலை எதிர்கொள்ள, விமானப்படையை பலப்படுத்த புதிய போர் விமானங்கள் தேவைப்படுகின்றன. எனவே,அடுத்த 20 ஆண்டுகளில் விமானப்படைக்கு350 போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளது. பாதுகாப்புத் துறையில் நாடு தற்சார்புநிலையை எட்ட வேண்டியுள்ளது. இலகு ரகதேஜஸ் போர் விமானங்களை தயாரிக்கும்திட்டத்தால், விமானத்துறை மிகப் பெரியவளர்ச்சி அடையும் நம்பிக்கை கிடைத்துள்ளது” என்று பதவுரியா கூறியுள்ளார்.

இதனிடையே, பாதுகாப்புத்துறைக் கான ஒன்றிய அமைச்சரவைக் குழு கூட்டம்தில்லியில் நடைபெற்ற நிலையில், இதில்,விமானப்படையில் தற்போது பயன்படுத் தப்பட்டு வரும் பழைய ‘ஏவிரோ’ ரக போக்குவரத்து விமானங்களுக்கு பதிலாக, புதிதாக 56 ‘சி-295’ ரக போக்குவரத்து விமானங்களை ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்துவாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள் ளது. இவற்றில் 16 விமானங்கள் பறக்கும் நிலையில் அந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும். மற்ற 40 விமானங்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

;